Ad Code

Responsive Advertisement

ஓடிடியில் வெளியாகிறது இயக்குனர் சிம்பு தேவனின் ‘கசட தபற’ ஆந்தலாஜி திரைப்படம்

இயக்குநர் சிம்பு தேவனின் ’கசட தபற’ ஆந்தாலஜி திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சிம்புதேவன் ‘கசட தபற’ ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’கசட தபற’ வில் இடம்பெறும் ஆறு கதைகளையும் சிம்புதேவனே இயக்கி இருக்கிறார். இதற்குமுன், ஓடிடி தளங்களில் வெளியான ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’, ‘நவரசா’ ஆந்தாலஜி படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு கதைகளையும் வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

image

கடந்த 6 ஆம் தேதி மணிரத்னத்தின்  ’நவரசா’ ஆந்தாலஜி படம் வெளியான நிலையில், தற்போது ‘கசட தபற’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கட் பிரபு. வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஆறு கதைகளில் சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், ரெஜினா,பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி, வெங்க பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி எஸ், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/37HEbid

Post a Comment

0 Comments