Ad Code

Responsive Advertisement

கிராமத்து கதைக்களத்தில் தயாராகும் ’அருண் விஜய் 33’ படப்பிடிப்பு

ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ‘அருண் விஜய் 33’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகர் அருண் விஜய்.

இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘அருண் விஜய் 33’ படத்தில் இணைந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய, இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் தடைப்பட்டுப் போனது. இந்த நிலையில், தற்போது அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். யோகி பாபு, சினேகேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

image

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் நடைபெற்றுவரும் ‘அருண் விஜய் 33’ படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படங்களை உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் அருண் விஜய் ”நீண்ட நாட்கள் கழித்து கிராமப்புற கதையில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கிறேன். ஷூட்டிங்கிலிருந்து உங்களுக்காக சில புகைப்படங்கள்” என்று பகிர்ந்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/37reX7o

Post a Comment

0 Comments