Ad Code

Responsive Advertisement

சென்னை, கோவையில் நடைபெறும் நயன்தாராவின் திகில் பட படப்பிடிப்பு

’ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கும் நடிகை நயன்தாரா படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. சென்னை மற்றும் கோவையில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படம் வெற்றி பெற்றதால்தான் நயன்தாரா அடுத்தடுத்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தார். ‘டோரா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’ உள்ளிட்டப் படங்களும் வெளியானது. ‘மாயா’ வெற்றியை தொடர்ந்து முன்னனி நாயகிகள் பலரும் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரங்கள் நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.

image

இப்படி, நடிகைகளுக்கு துணிச்சலைக் கொடுத்த ‘மாயா’ படத்தை தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மூலமாக தயாரித்தவர் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு. அடுத்ததாக இவரது தயாரிப்பில் நயன்தாரா - கார்த்தி நடிப்பில் ‘காஷ்மோரா’ வெளியானது. அதுவும் சூப்பர் ஹிட். இந்த நிலையில், இக்கூட்டணி ஹாட்ரிக் வெற்றி கொடுக்க மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

நாயகிக்கு முக்கியத்தும் கொண்ட, இந்தத் திகில் திரைப்படத்தை வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் விக்னேஷ் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருபவர்கள் அடுத்ததாக கோவையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2URZRoJ

Post a Comment

0 Comments