
”எஞ்சமூகத்துக்கு இப்படியொரு படம் கொடுத்ததுக்கு உங்கையப் புடிச்சு ஒரு நூறு முத்தங்களைக் கொடுப்பேன்” என்று ’சார்பட்டா பரம்பரை' படத்தைப் பாராட்டியிருக்கிறார் நடிகர் நாசர்.
சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் பாராட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாகவும் விமர்சகர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.
ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், ஷபீர்,ஜான் விஜய் ஆகிய நடிகர்களின் பெயர்களே மறந்துவிட்டு கபிலன், மாரியம்மா,வேம்புலி, டான்சிங் ரோஸ், டேடி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களே நம் மனதில் நிற்கும் அளவிற்கு திரைக்கதையை சுவாரசியமாக வடிவமைத்திருப்பார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இந்த நிலையில் நடிகர் நாசர், ’சார்பட்டா பரம்பரை’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ரஞ்சித்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “தம்பி ரஞ்சித் நான் உன்னை பாராட்ட மாட்டேன். உங்கையப் புடிச்சு ஒரு நூறு முத்தங்களைக் கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன். இப்படியொரு படம் எஞ்சமூகத்துக்கு கொடுத்ததுக்கு” என்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களை கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3iTN39E



0 Comments