Ad Code

Responsive Advertisement

’காசேதான் கடவுளா’ படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ புகழ்

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் ’காசேதான் கடவுளடா’ படத்தில் இணைந்திருக்கிறார் ‘குக் வித் கோமாளி’ புகழ்.

கடந்த 1972-ஆம் ஆண்டு சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், லட்சுமி நடிப்பில் வெளியான 'காசேதான் கடவுளடா' நகைச்சுவை திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் ஆர்.கண்ணன் தற்போது ரீமேக் செய்கிறார். பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ‘குக் வித் கோமாளி’புகழ்.

image

காரைக்குடியில் ஒரு மாதம் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருவரும் பாசமலர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3eYsveW

Post a Comment

0 Comments