Ad Code

Responsive Advertisement

ஃபகத் ஃபாசிலுடன் ‘மாலிக்’ படத்தைப் பார்த்த ’விக்ரம்’ படக்குழுவினர்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்பில் ஃபகத் ஃபாசிலின் ‘மாலிக்’ படத்தை பார்த்து ரசித்துள்ளனர் படக்குழுவினர்.

’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான, பணிகள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வந்தன. இருந்தாலும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் 'விக்ரம்' படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

image

கடந்தவாரம், இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் ஃபகத் ஃபாசில். கமல்ஹாசனுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இந்த நிலையில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஃபகத் ஃபாசிலின் ‘மாலிக்’ படத்தை கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டப் படக்குழுவினர் ஷூட்டிங் ப்ரேக்கில் பார்த்து ரசித்துள்ளனர்.

image

ஏற்கெனவே, ‘மாலிக்’ பார்த்த தமிழ் ரசிகர்கள் கமல்ஹாசனின் ‘நாயகன்’ படம்போல் இருக்கிறது என்று கருத்துகளை பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2WfSiZj

Post a Comment

0 Comments