
ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா மீது இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு மசோதாவை கொண்டுவந்துள்ளது. அதில் தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு ஆட்சேபனை வந்தால் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தலாம். திருட்டு வீடியோவிற்கு எதிராக அதிக தண்டனை உள்ளிட்ட வரைவுகளை சேர்த்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவில் உள்ள ‘தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தலாம்‘ என்ற வரைவு மிகவும் ஆபத்தானது என்று திரையுலகினர் கூறுகின்றனர். மேலும் அது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் விதத்தில் உள்ளது என கருத்து தெரிவித்திருந்தனர்.
தற்போது தயாநிதி மாறன் உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு தகவல் தொழில்நுட்பத்துறை, ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாமீது இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று பதில் அளித்திருக்கிறது. ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் மீதான பரிந்துரைகள் ஆலோசனை கட்டத்தில் மட்டுமே உள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zmQ20G



0 Comments