Ad Code

Responsive Advertisement

'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் நடிக்கும் படப்பிடிப்பில் பிறந்தநாளைக் கொண்டாடிய யோகி பாபு

நடிகர் யோகி பாபு தனது பிறந்தநாளை, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கொண்டாடியுள்ளார்.

தனது கடை தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தற்போது ஜேடி-ஜெர்ரி இரட்டை இயக்குநர்கள் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் யோகி பாபு இன்று நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டதும் படக்குழுவினர் கேக் வெட்டி யோகி பாபுவின் பிறந்தநாளைக் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளனர்.

image
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அவரது கடை தொடர்பான விளம்பரங்களில் நடித்து வந்தார். அவரது தோற்றத்தையும், பாவனையையும் நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். சிலர் ஆதரவும் தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி, படத்திற்கு பூஜையும் போடப்பட்டது. இந்தப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zOWjTl

Post a Comment

0 Comments