
தனது புகைப்படத்தை மூக்கால் ஓவியமாக வரைந்து கவனம் ஈர்த்த கேரள ரசிகருக்கு நன்றி தெரிவித்து உள்ளார் நடிகர் சூர்யா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் 46-வது பிறந்த நாள் கடந்த 23-ம் தேதி அன்று அவரது ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் விதவிதமாக ஹேஷ்டேக்களை உருவாக்கி இணையத்தில் வாழ்த்து மழையை பொலிந்தனர்.
குறிப்பாக கேரளாவில் உள்ள இந்திரஜித் தாவ் என்ற இளம் ரசிகர் ஒருவர், சூர்யாவின் புகைப்படத்தை சுவற்றில் தனது மூக்காலே தத்ரூபமாக வரைந்து ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
இந்த வீடியோவினை இயக்குனர் ராஜசேகர் பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள், பிரபலங்களுக்கு ட்விட்டரில் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து வருகிறார்.
அதன்படி தனது புகைப்படத்தை மூக்கால் ஓவியமாக வரைந்து கவனம் ஈர்த்த ரசிகர் இந்திரஜித் தாவுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து உள்ளார். அவரது வீடியோவினை ரீ-ட்விட் செய்து, இது தனது மனதில் நிழலாடுவதாக பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா.
This is mind blowing!!! #indrajith_dav https://t.co/w6cpyFZ8DX
— Suriya Sivakumar (@Suriya_offl) July 25, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kU2e5e



0 Comments