Ad Code

Responsive Advertisement

‘பீஸ்ட்’ படப்பிடிப்பு தளத்தில் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் கார்த்தி!

விஜயின் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் விஜயை சந்தித்து நடிகர் கார்த்தி வாழ்த்து பெற்றுள்ளார்.

நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பும், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி, பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜயை சந்தித்துள்ளார்.

அப்போது நடிகர் கார்த்தி, சர்தார் திரைப்படத்தின் வயதான தோற்றத்தில் இருந்ததால், விஜய் அவரை அடையாளம் காண முடியவில்லை.  அதன்பின் நடிகர் கார்த்தி அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு விஜய் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.  அத்துடன் கார்த்தியின் தோற்றத்திற்கு அவர் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். அந்த சந்திப்பின்போது இருவரும் தங்கள் திரைப்படங்கள் பற்றியும்,  நடிகர் சங்க விஷயங்கள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3BpxaQL

Post a Comment

0 Comments