Ad Code

Responsive Advertisement

நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாகும் ‘நரகாசுரன்’?

அரவிந்த் சாமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசுரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.  துருவங்கள் பதினாறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேன்,  கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் நரகாசுரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.   

அந்தப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஆனால் நரகாசுரன் திரைப்படம் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக வெளியாகவில்லை.  கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த திரைப்படம் முடங்கியுள்ளது.  

இந்த நிலையில் Sony Liv தளத்தில் நரகாசுரன் திரைப்படத்தை வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நரகாசுரன் நிச்சயம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதே போல் ஆகஸ்ட் 13ஆம் தேதி அந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3hKinbq

Post a Comment

0 Comments