
’அறிந்தும் அறியாமலும்’, ’பட்டியல்’, பில்லா, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய விஷ்ணு வர்தன், தற்போது பாலிவுட்டில் ‘ஷெர்ஷா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றைத்தான் படமாக இயக்கி முடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் தயாரித்துள்ளார். இந்த நிலையில், ‘ஷெர்ஷா’ வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3eobmLl



0 Comments