Ad Code

Responsive Advertisement

இன்ஸ்டாகிராமில் 19 மில்லியன் ஃபாலோயர்ஸ்: காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா

தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இவரது நடிப்பில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் இந்தியா முழுக்க கவனம் ஈர்த்தார் ராஷ்மிகா. அதுவே, அவரை ‘நேஷனல் க்ரஷ்’ ஆக்கியது. கூகிளில் நேஷனல் க்ரஷ் என்று தேடினால் ராஷ்மிகா மந்தனா பெயர்தான் வரும். அந்தளவிற்கு இளம் தலைமுறையினருக்கு தனது க்யூட் எக்ஸ்பிரஷன்களால் பிடித்த நடிகையாக இருக்கிறார்.

image

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகைகளில் அதிக ஃபாலோயர்ஸ் எண்ணிக்கைக் கொண்ட நடிகைகளில் காஜல் அகர்வால் முன்னிலையில் இருந்தார். அவரைத்தொடர்ந்து, நடிகை ஸ்ருதிஹாசன், ரகுல் ப்ரித் சிங், சமந்தா உள்ளிட்டோர் இருந்தனர். இந்த நிலையில், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 19 மில்லியன் 20 ஆயிரம் ஃபாலோயர்ஸ்களைப் பெற்றுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. முதல் இடத்தில் இருந்த காஜல் அகர்வால் சரியாக 19 மில்லியன் ஃபாலோயர்ஸ்களும், சமந்தா 17 மில்லியன் 50 ஆயிரம் ஃபாலோயர்ஸ்களும், ரகுல் ப்ரீத் சிங் 17 மில்லியன் 20 ஆயிரம் ஃபாலோயர்ஸ்களையும், ஸ்ருதிஹாசன் 17 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும் அடுத்தடுத்து கொண்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3riF8Gl

Post a Comment

0 Comments