Ad Code

Responsive Advertisement

விறுவிறு படப்பிடிப்பில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதிக்குள் முடிந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் வேலைகள் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் வசன காட்சிகளையும்,  சண்டைக் காட்சிகளையும் இயக்குநர் படமாக்கி விட்டார். இன்னும் இரண்டு பாடல்களை மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அந்த வேலையும் ஆகஸ்ட் 20-க்குள் முடிவடைந்துவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதையும் ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க எஸ்எஸ் ராஜமௌலி திட்டமிட்டிருக்கிறார்.

image

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை அக்டோபர் 13-ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  இதனால் புரமோஷன் வேலைகளையும் விரைவில் தொடங்கவுள்ளனர். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.  அந்த வீடியோவை 24 மணி நேரத்தில் சுமார் 6.2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இதற்கு இயக்நனர் எஸ்.எஸ்.ராஜமௌலி நன்றி தெரிவித்திருக்கிறார். அத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக இருந்ததாகவும், இந்த வீடியோவை எஸ்.எஸ்.கார்த்திகேயவின் குழுவினர் தான் உருவாக்கினர் என்றும் தெரிவித்திருக்கிறார்.  எனவே ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளும் அவர்களைதான் சென்றடையும் என்று எஸ்.எஸ்.ராஜமவுலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/36U21H7

Post a Comment

0 Comments