Ad Code

Responsive Advertisement

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

image

மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தமானார். இதற்கான வேலைகள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வந்தன. இருந்தாலும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் இன்று 'விக்ரம்' படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

image

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

image

முதல்நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3BbrERy

Post a Comment

0 Comments