
நடிகர் விஜய்க்காக அவரது ரசிகர்கள் பனையூரில் உள்ள அலுவலகத்தில் புதிதாக சிலை ஒன்றை நிறுவியுள்ளனர்.
விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜயின் அலுவலகத்தில் நடைபெற்றது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மங்களூரு மக்கள் இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயின் முழு உருவ சிலையை, விஜய் மக்கள் இயக்க செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, விஜய் சிலையுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தற்போது இந்த விஜய் சிலை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kRs2yT



0 Comments