
நடிகர்கள் ஆர்யா சாயிஷா தம்பதிக்கு நேற்று இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை, நடிகர் விஷால் தனது சமூக வலைதளம் பக்கம் வழியாக தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் ஆர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளிவந்த சார்பட்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. சார்பட்டா வெற்றிக்களிப்பிலிருந்த ஆர்யாவுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் விதமாக அமைந்துள்ளது அவரின் குழந்தை.
So Happy to break this news,great to be an Uncle,my Bro Jammy & Sayyeshaa r blessed wit a #BabyGirl,uncontrollable emotions rite now in midst of shoot.Always wish de best 4 dem,Inshallah,GB de new Born,my Baby Girl @sayyeshaa & @arya_offl for taking a new responsibility as a Dad
— Vishal (@VishalKOfficial) July 23, 2021
ஆர்யா – சாயிஷாவின் குழந்தை குறித்து அறிவிப்பு வெளியிட்ட விஷால், தனது பதிவில், “இந்த சந்தோஷமான விஷயத்தை பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. என்னுடைய சகோதரன் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. படப்பிடிக்கும் இடையில் இருக்கும் எனக்கு, நான் மாமா ஆகியுள்ளேன் என்ற இந்த செய்தி விவரிக்க முடியாதளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுப்பான அப்பாவாக பொறுப்பேற்கும் ஆர்யாவுக்கு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! எப்போதும் ஆர்யாவுக்கு சாயிஷாவுக்கும் சிறந்தவை கிடைக்க என் வாழ்த்துகள்” எனக்கூறியுள்ளார்.

விஷால் செய்தி பதிவிட்டதை தொடர்ந்து, ஆர்யா - சாயிஷாவின் நண்பர்கள், ரசிகர்கள், அவருடன் பணிபுரிந்த திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3y4EEWW



0 Comments