
பிரபாஸ் - தீபிகா படுகோனே இணையும் ’பிரபாஸ் 21’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
’தேசிய விருது’ இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், அதற்குப் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வந்த பிரபாஸ் தற்போது படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், இன்று ‘குரு பூர்ணிமா’வை முன்னிட்டு வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் ’பிரபாஸ் 21’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’மகாநடி’ கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. தமிழில் ’நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததோடு, சிறந்த தெலுங்கு மொழி படம் என்ற மற்றொரு தேசிய விருதும் ’மகாநடி’க்கு கிடைத்தது. தேசிய விருதுகளைக் குவித்த இப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின்தான், தற்போது ’பிரபாஸ் 21’ படத்தை இயக்குகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3iFI0tf



0 Comments