Ad Code

Responsive Advertisement

200 கோடி பட்ஜெட்: ’பாகுபலி’ வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா

நடிகை நயன்தாரா ‘பாகுபலி’ வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ‘பாகுபலி’ வெற்றி பெற்றதைத்தொடர்ந்து ‘பாகுபலி 2’ வெளியானது. இரண்டு பாகத்திலுமே மிரட்டலான நடிப்பில் கவனம் ஈர்த்தார் சிவகாமி தேவி ராஜமாதாவாக வரும் ரம்யா கிருஷ்ணன். வீரமான, துணிச்சலான, தலைமைப்பண்புடன் கூடிய அரசியாக வடிவமைக்கப்பட்டிருந்தது அவரது கதாபாத்திரம்.

image

இந்த நிலையில், சிவகாமி தேவியின் இளம் வயது வாழ்க்கையை தற்போது வெப் சீரிஸுக்காக 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கவிருக்கிறார்கள். இதுவரை வெப் சீரிஸ்களில் நடிக்காமல் இருந்த நயன்தாரா. இந்தக் கதைக்கு உடனே ஓகே சொல்லி இருக்கிறார். ஏற்கனவே, ‘காஷ்மோரா’, 'சைரா நரசிம்ம ரெட்டி’ உள்ளிட்டப் படங்களில் நயன்தாரா இளவரசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக உருவாக்கப்படவுள்ளது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Uhd0aK

Post a Comment

0 Comments