கொரோனா சூழலில் வருமானமின்றி தவித்து வந்த ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்தினர்களுக்கும், ஏழைகளுக்கும் அரிசி, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கி பேருதவி செய்துள்ளனர் வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மக்களும் ஏழைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உணவு, மளிகைப்பொருட்கள், காய்கறி, கிருமி நாசினி தெளிப்பு போன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாகவும், விஜய் பிறந்தநாளை முன்னிட்டும் வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் நேற்று கொரோனா ஊரடங்கால் வருமானமின்றித் தவித்த ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்தினருக்கும், வேலூர் நகராட்சி ஊழியர்கள் குடும்பத்தினருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகள் குடும்பத்தினருக்கும் அரிசி, மளிகைப்பொருட்கள், மற்றும் காய்கறிகள் வழங்கியதோடு அன்னதானமும் செய்துள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jjk68P
0 Comments