Ad Code

Responsive Advertisement

'இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக சினிமா, ஊடகம், கல்வி இருக்காது' - கமல்ஹாசன் ஆவேசம்

'சினிமா, ஊடகம் மற்றும் கல்வி எப்போதுமே இந்தியாவின் மூன்று குரங்குகளாக இருக்காது' எனக் கூறியுள்ளார் கமல்ஹாசன்.
 
ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. இது பொதுமக்களின் பார்வைக்காக ஜூலை 2 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என சினிமா துறையை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், இந்த வரைவு மசோதாவிற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மூத்த நடிகருமான கமல்ஹாசன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், ''கண், வாய், காதுகளை அடைத்துக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக ஒரு போதும் சினிமா, ஊடகம் மற்றும் கல்வி இருக்காது. அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால் அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும். இந்த சட்டத்திருத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3A7nf1t

Post a Comment

0 Comments