
மலையாள பட ஷூட்டிங்கிற்காக தனி விமானத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.
தொடர்ச்சியாக தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகை நயன்தாரா, சமீபமாக மலையாள படங்களிலும் ஆண்டுக்கு ஒன்று என்று நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ’லவ் ஆக்ஷன் ட்ராமா’ படத்தில் நடித்தவர், அடுத்ததாக சமீபத்தில் வெளியான ‘நிழல்’ படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் வெளியாவதற்கு முன்னரே ’நேரம்’, ’பிரேமம்’ பட புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக ’பாட்டு’ படத்தில் நடிப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் நயன்தாரா கொச்சின் சென்றடைந்துள்ளார். விக்னேஷ் சிவன் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், கொச்சினை சென்றடைந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதேபோல், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மலையாள புத்தாண்டை கொண்டாடவும் தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் சென்றிருந்தார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/35vkDw8



0 Comments