Ad Code

Responsive Advertisement

5 வருடத்தை நிறைவு செய்த ‘இறைவி’; ட்விட்டரில் சீன் பேப்பரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 'இறைவி' படத்தின் 5 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இறைவி’. எஸ்.ஜே. சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான இந்தப்படம் ஆண்களின் சுயநலத்தின் வாயிலாக, பெண்களின் வாழ்கை எப்படி இறையாக்கப்படுகிறது என்பதை மிக அழுத்தமாக பேசியது. படம் வெளியான தருணத்தில் பிரபலங்கள் உட்பட பலருக்கும் ’இறைவி’ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள். வணிக ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்த இந்தப்படம் தனது 5ஆவது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது.

image

இதனை கொண்டாடும் விதமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் டிராப்டில் எழுதிய இறுதிக்காட்சியின் சீன் பேப்பரை வெளியிட்டு , இந்தப்படம் என் இதயம் மட்டுமல்லாது பலரின் இதயத்திற்கு நெருக்கமான படமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3irgsJJ

Post a Comment

0 Comments