Ad Code

Responsive Advertisement

சிம்பு நடித்துள்ள 'மாநாடு' படத்தின் பாடல் வெளியீடு தள்ளி வைப்பு

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக சிம்பு நடித்துள்ள 'மாநாடு' படத்தின் பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'மாநாடு' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ஒரு பாடலை ரம்ஜான் பண்டிகைக்கு வெளீயிட திட்டமிட்டிருந்தனர். இதற்கான வேலைகளும் நடைபெற்று வந்தன.

ஆனால் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயார் மறைந்ததன் காரணமாகவும் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஏற்கனவே அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் பார்வை வெளியீடும் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3eEO5Fe

Post a Comment

0 Comments