Ad Code

Responsive Advertisement

விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை சி.எஸ்.அமுதன் இயக்க வாய்ப்பு!

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்ப் படம்', 'தமிழ்ப் படம் 2' ஆகிய படங்களை இயக்கியவர் சி.எஸ்.அமுதன். இந்த இரண்டு படங்களும் வெற்றியடைந்திருந்தாலும், அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் அதிக நாள்களை எடுத்துக்கொள்பவர் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.

'தமிழ்ப் படம் 2' வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அவர் அடுத்தப் படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

image

இதற்காக நடிகர் விஜய் ஆண்டனியிடம் ஒரு கதையைக் கூறி, சம்மதம் பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. அதேவேளையில், மேலும் இரு நடிகர்களிடமும் அவர் கதை கூறியிருக்கிறார். இவற்றில் எந்தப் படத்தை முதலில் இயக்குவார் என்பது விரைவில் தெரியவரும் என்று சி.எஸ்.அமுதன் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இந்த கதைகள் அனைத்தும் அவரின் முந்தைய படங்களிலிருந்து மாறுபடும் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

இயக்குநர் சி.எஸ்.அமுதன் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு விளம்பரப் படம் இயக்கி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3d9V20D

Post a Comment

0 Comments