
’அண்ணாத்த’ படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ’சிறுத்தை’ சிவாவுடன் ரஜினி உற்சாகமுடன் சிரிக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் படத்தில் உள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.

சமீபத்தில், சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கடந்தவாரம் சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார் ரஜினி. அங்கு தொடர்ச்சியாக நடைபெறவிருக்கும் மூன்று வார படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், ஹைதராபாத் படப்பிடிப்பு தளத்தில் ‘அண்ணாத்த’ பட வேஷ்டி சட்டை கெட்டப்பில் சிறுத்தை சிவாவுடன் உற்சாகமுடன் சிரித்துக்கொண்டிருக்கும் ரஜினியின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3tbJtLT



0 Comments