
பார்த்திபன் இயக்கி நடிக்கும் இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் திரைப்படம் 'இரவின் நிழல்'. ஒரே ஷாட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அவரே நடித்தும் வருகிறார். அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்திபன் இயக்கி வரும் ‘இரவின் நிழல்’ படத்தில் பணியாற்றி வருவதாக கூறினார்.
அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த இயக்குநர் பார்த்திபன், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது என குறிப்பிட்டு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றி வருவதை உறுதி செய்தார்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 11, 2021
Yes SIR is IN (Iravin Nizhal)
பெருமை!
அருமையில் - 3 பாடல்கள் கைவசம்
அருகாமையில் இன்னொன்று-promotional song
So...
So hhaappppyy pic.twitter.com/sj8tfZNoLG
மேலும் இரவின் நிழல் படத்திற்காக 3 பாடல்கள் நிறைவு பெற்றுவிட்டதாகவும், ப்ரோமோஷனுக்காக ஒரு பாடல் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மானும், பார்த்திபனும் கடந்த 2001 ஆம் ஆண்டு யெலோலோ என்ற இசைக்களம் சார்ந்த படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் அந்தப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டது. இந்தநிலையில் தற்போது ‘இரவின் நிழல்’ படம் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானும், பார்த்திபனும் இணைந்துள்ளனர்.

இது குறித்து பார்த்திபன் கூறும் போது, “ ‘இரவின் நிழல்’படத்தில் உலக அளவில் எடுக்கப்படாத ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளோம். நான் பல படங்களை ஆய்வுக்கு உட்படுத்தினேன். சில படங்கள் மட்டும்தான் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் உருவாக்கம், மற்றப்படங்களில் இருந்து இரவின் நிழலை நிச்சயம் தனித்துவம் மிக்கதாக காண்பிக்கும். நான் இந்தப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறேன். இது போன்ற களத்தில் நான் இதுவரை பணியாற்றியதில்லை” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3a5SNJD



0 Comments