
தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது உண்மைதான் என நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது உண்மைதான். யாரும் பயப்பட வேண்டாம். நான் நல்லா இருக்கேன். கொரோனா வந்தால் யாரும் பயப்பட தேவையில்லை. கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். மருத்துவர்கள் சொல்லும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அதேபோல் நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நல்லது. எனக்கு நாளை மீண்டும் பரிசோதனை செய்வார்கள். நெகட்டிவ் என்றால் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகர் செந்தில், அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dgttTm



0 Comments