Ad Code

Responsive Advertisement

போலீஸாக சூரி, கைதியாக விஜய்சேதுபதி; வெற்றிமாறன்-சூரி இணையும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

இயக்குநர் வெற்றிமாறன், சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘அசுரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். விடுதலை படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

image

image

படத்தின் போஸ்டர்களில் நடிகர் சூரி போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கைதி போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3n8xEDQ

Post a Comment

0 Comments