Ad Code

Responsive Advertisement

"புதிய பரிமாணத்தில் மாமா விஜய் சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி" - சூரி நெகிழ்ச்சி

”என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏற்படுத்திக்கொடுத்த வெற்றி மாறன் அண்ணனுக்கு நன்றி” என்று படக்குழுவிற்கு நெகிழ்ச்சியுடன் நன்றிகளை குறிப்பிட்டுள்ளார் நடிகர் சூரி.

’அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன் பாவக்கதைகளில் இடம்பெற்ற நான்கில் ‘ஓர் இரவு’ என்ற கதையை இயக்கி இருந்தார். அதன்பிறகு, தற்போது ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை எடுத்து சூரியை வைத்து ’விடுதலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், சூரியுடன் விஜய் சேதுபதியும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார். இளையராஜா இசையமைக்க எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். சத்திய மங்கலம் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை முடித்த கையோடு இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருகிறது படக்குழு.

image

போலீஸாக நடிக்கும் சூரியும் கையில் விலங்குடன் இருக்கும் விஜய் சேதுபதியின் மிரட்டல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன் அண்ணனுக்கும், இசைஞானி ஐயா அவர்களுக்கும், எல்ரெட் குமார் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். புதிய பரிமாணத்தில் மாமா விஜய் சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/32DoqpW

Post a Comment

0 Comments