
நடிகர் எம்.எஸ் பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நகைச்சுவை மற்றும் உறுதுணை கதாப்பாத்திரங்களின் மூலம் கவனம் ஈர்த்து வரும் நடிகர் எம்.எஸ் பாஸ்கருக்கு ஆதித்யா என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.

ஆதித்யா பாராட்டுக்களைக் குவித்த ‘96’ படத்தில் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் என்றால், ஐஸ்வர்யா முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்டாக கலக்கி வருகிறார்.

விஸ்காம் படித்துள்ள ஐஸ்வர்யா கடந்த 2018-ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி எம்.எஸ் பாஸ்கருக்கு சர்ப்ரைஸாக பைக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்கள் முழுக்க வைரலாகி நெகிழ்ச்சியையும் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் சுதாகர் சீனாவின் மகன் அகுல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

நேற்று மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் விஜய் சேதுபதி, சரத்குமார், டி.ராஜேந்தர், மயில்சாமி, வையாபுரி, இயக்குநர் விக்ரமன்,ராதாரவி,கவின், தேவா, உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3xijGE0



0 Comments