
நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளது. அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘வலிமை’ அப்டேட் கேட்டுவந்த நிலையில் அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சமீபத்தில் அறிவித்திருந்தார் போனி கபூர்.

ஈஸ்வரமூர்த்தி என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கடந்த பிப்ரவரியே படப்பிடிப்பை முடித்திருந்தாலும் இன்னும், ஒரேயொரு சண்டைக் காட்சியை ஸ்பெயினில் படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதனிடையே, அஜித் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்ற புகைப்படங்கள், சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள், ஆட்டோவில் பயணம் செய்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தின.

தற்போது, ‘வலிமை’ படத்தின் டப்பிங் பணிகள், ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுப் பணிகள் போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நேவி ப்ளூ கலர் உடையில் அஜித் சோகத்திலும் டென்ஷனிலும் அமர்ந்திருக்கும் புகைப்படமும், அதே உடையில் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் நடந்து செல்லும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
Exclusive Video Of THALA AJITH ??
— AJITHKUMAR FANS CLUB (@TeamThalaFC) April 12, 2021
That Majestic Walk..?#Valimai | #AjithKumar pic.twitter.com/e3eWsW9MBH
அவர் எதற்காக அப்படி அமர்ந்திருக்கிறார் என்று தெரியாவிட்டாலும் ’செம்ம மாஸ்’ என்று அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2OJxyWE



0 Comments