Ad Code

Responsive Advertisement

‘மண்டேலா’.. என்னா கதை.. என்னா நடிகர்.. - யோகிபாபுவை பாராட்டித் தள்ளிய கிரிக்கெட் வீரர்கள்!

‘மண்டேலா’ படத்தை கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி ட்விட்டர்பக்கத்தில் பதிவிட்ட பதிவுகள் தற்போது ட்விட்டர் தளத்தில் கவனம் பெற்று வருகிறது.    

மடோன் அஸ்வின் இயக்கத்தில், யோகி பாபு - ஷீலா ராஜ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மண்டேலா’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் 4 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியிலும், 5-ஆம் தேதி ஓடிடி தளத்திலும் வெளியானது.

image

இந்த நிலையில் இந்தப்படம் குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டதாவது, “ கடந்த சில நாட்களுக்கு முன்னர் யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ படத்தை பார்த்தேன். படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பைக் கண்டு மிரண்டு விட்டேன். குறிப்பாக யோகிபாபுவின் நடிப்பு. என்னா நடிகர்... என்னா கதை .. அதன் பின்னர் நண்பர் நடராஜன் மூலம் வீடியோ கால் வழியாக யோகிபாபுவிடம் பேசினேன்.” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த, கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த், “ வாவ் மச்சான். நான் இதை உன்னிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. நான் இந்தப்படத்தை நேற்று இரவுதான் பார்த்தேன். உண்மையில் படம் பிரமாதம். நிச்சயமாக இந்தப்படம் நிறைய விருதுகளை வெல்லும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது ட்விட்டர் தளத்தில் கவனம் பெற்று வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3s8QqvW

Post a Comment

0 Comments