Ad Code

Responsive Advertisement

“வெறும் நடிப்பு; திட்டாதீங்க; முடியல” - கர்ணன் படத்தில் கண்ணபிரானாக நடித்த நட்ராஜ்!

கர்ணன் படத்தில் நடித்ததற்காக ’என்னை திட்டாதீங்க எப்போவ்’ என்று நெகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் நட்ராஜ்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’ வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில், கண்ணபிரான் என்ற காவல்துறை அதிகாரியாக மக்கள் மீது வன்முறையை ஏவியிருப்பார் நட்ராஜ். அவரது, மிரட்டலான நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதேசமயம், ‘கர்ணன்’ படத்தில் வில்லனாக நடித்ததற்காக திட்டுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன என்பதை நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

image

அந்தப் பதிவில், “என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்.. போன், மெசேஜ்ல திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி” என்று அன்புடனும் நெகிழ்ச்சியுடனும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3eb5OTF

Post a Comment

0 Comments