
’பிக்பாஸ்’ புகழ் முகேன் ராவ் நடிக்கும் ‘வேலன்’ படத்தில் மலையாளியாக நடித்துள்ள சூரி தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
’பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த முகேன் ராவ் ‘வெற்றி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை, கடந்த 2011 ஆம் ஆண்டு நானி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான ‘வெப்பம்’ படத்தின் இயக்குநரும் கெளதம் மேனனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த அஞ்சனா அலிகான் இயக்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் முகேன் ராவ் நடிக்கும் ‘வேலன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது. கவின் இயக்கும் இப்படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சூரி மலையாளியாக நடிக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகளை சூரி தொடங்கியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2QozrIR



0 Comments