Ad Code

Responsive Advertisement

கார் ஓட்டுநராக களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்: தொடங்கியது ‘டிரைவர் ஜமுனா’ படப்பிடிப்பு

வத்திக்குச்சி இயக்குநர் கின்ஸ்லியுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கதாபாத்திர முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த க. பெ. ரணசிங்கம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் தற்போது வத்திக்குச்சி இயக்குநர் கின்ஸ்லியுடன் இணைய இருக்கிறார்.

image

‘டிரைவர் ஜமுனா’ என பெயரிடப்பட்ட இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுநராக  நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படத்தில் அசுரன் படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் பணியாற்றியுள்ளார்.

image

கார் ஓட்டுநர் உலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் குறித்து இயக்குநர் கின்ஸ்லி கூறும்போது, “ படத்தில் நிறைய கார் சேசிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கதாபாத்திரத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் உடலவிலும் தன்னை தயார்படுத்தியுள்ளார். நிறைய பெண் ஓட்டுநர்களை சந்தித்து பேசினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட உள்ளது” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2OLnA74

Post a Comment

0 Comments