
சுந்தர் சி இயக்கத்தில் ’அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வினய், ஆண்ட்ரியா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ’அரண்மனை’படம் வசூல் ரீதியாக வெற்றியைக் குவித்தது. அதன் வெற்றியால், ‘அரண்மனை 2’ படத்தை எடுத்தார் சுந்தர் சி. இதில், சித்தார்த் ஹன்சிகா,த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால், முதல் பாகம் போல் இரண்டாம் பாகம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ‘அரண்மனை 3’ எடுக்கப்போவதாக அறிவித்தார் சுந்தர் சி.

ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இப்படத்தை குஷ்பு தயாரித்துள்ளார். இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், மோஷன் டீசரும் இன்று வெளியாகியுள்ளது. ’அரண்மனை’ படத்தைப் போலவே ’அரண்மனை 3’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மோஷன் டீசரில் அதே பங்களா, அதே சிறுமி கதாப்பாத்திரம் காட்டாப்படுவதாலும் மறைந்த நடிகர் விவேக் இருப்பதாலும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2QgJbFo



0 Comments