Ad Code

Responsive Advertisement

கார்த்தி - மித்ரன் இணையும் புதிய படம்: ஏப்.26-ல் படப்பிடிப்பு தொடக்கம்!

கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.

'இரும்புத்திரை', 'ஹீரோ' ஆகிய படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவரின் முதல் படம் வெற்றியடைந்த அளவிற்கு இரண்டாவது படம் வெற்றியடையவில்லை. இதனால் மூன்றாவது திரைப்படத்திற்கு அதிக கவனத்துடன் கதை எழுதியுள்ளார். கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கான முதற்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் நடிகர்கள் தேர்வும் முடிந்துவிட்டது. இதனால் வரும் 26-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் முன், மித்ரன் படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை முடிக்க நடிகர் கார்த்தி திட்டமிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mMugOX

Post a Comment

0 Comments