
பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் தனக்கும் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் என்று நடிகர் விஷ்ணு விஷால் தனது திருமண பத்திரிகையை ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
நடிகர் விஷ்ணு விஷால் 4 வருடங்களாக காதலித்து வந்த தனது கல்லூரி ஜூனியர் மாணவி ரஜினி நட்ராஜ் என்ற பெண்ணை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ரஜினியின் அப்பா நட்ராஜ் பிரபல வில்லன் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிகளுக்கு ஆர்யன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இதனிடையே இருவருக்கும் மனவருத்தம் ஏற்பட்டு சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இதன்பின், பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் இணைந்து பேசப்பட்டு வந்த விஷ்ணு விஷால், ஜுவாலாவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை இருவருமே சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றி வந்தனர்.

சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று ஜுவாலாவுடனான காதலை உறுதி செய்த விஷ்ணு விஷால் 'காடன்' படத்தின் தெலுங்கு விழாவில் கலந்துகொண்டபோது ”நாங்கள் இருவரும் விரைவில் இணைய இருக்கிறோம். ஆம், நான் தெலுங்கு தேச அல்லுடு (தெலுங்கு தேசத்தின் மருமகன்) ஆகப் போகிறேன். இதை நினைத்து பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது. நான் விரைவில் திருமண தேதி அறிவிக்கிறேன்" என்று பேசியிருந்தார்.
LIFE IS A JOURNEY....
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) April 13, 2021
EMBRACE IT...
HAVE FAITH AND TAKE THE LEAP....
Need all your love and support as always...@Guttajwala#JWALAVISHED pic.twitter.com/eSFTvmPSE2
அதன்படி, இன்று தனது திருமண தேதியை ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் விஷ்ணு விஷால். வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dbtiIM



0 Comments