Ad Code

Responsive Advertisement

மலையாள திரைப்பட பாடலாசிரியர் ஸ்ரீகுமாரன் தம்பிக்கு சபரிமலை "ஹரிவராசனம்" விருது!

மலையாள திரையுலகின் பிரபல பாடலாசிரியரும் இயக்குனருமான ஸ்ரீ குமாரன் தம்பிக்கு 2022ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் சபரிமலை "ஹரிவராசனம்" விருது வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், ஸ்ரீ குமாரன் தம்பிக்கு விருது வழங்கி கவுரவித்தார். விருதோடு இணைந்த ஒரு லட்சம் ரூபாய் பரிசுக்கிழியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

image

சபரிமலை “ஹரிவராசனம் விருது” என்பது, கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் பின்னணி பாடகர் கே.கே.ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், பின்னணி பாடகிகளான பி.சுசீலா, சித்ரா, ஜெயவிஜயா, இசையமைப்பாளர் கங்கை அமரன், பக்தி பாடலாசிரியர் எம்.ஆர்.வீரமணி ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.

image

கடந்த 2020ம் ஆண்டுக்கான சபரிமலை “ஹரிவராசனம்” விருது ”இசைஞானி” இளையராஜாவிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான சபரிமலை "ஹரிவராசனம்" விருது, மலையாள திரையுலகின் பிரபல பாடலாசிரியரான ஸ்ரீகுமாரன் தம்பிக்கு வழங்கி கௌவிரக்கப்பட்டுள்ளது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Ga4HrcC

Post a Comment

0 Comments