Ad Code

Responsive Advertisement

அனுமதியின்றி துணிவு, வாரிசு நள்ளிரவு காட்சிகள் - தியேட்டர்களுக்கு மதுரை ஆட்சியர் நோட்டீஸ்

வாரிசு, துணிவு திரைப்படங்களை நள்ளிரவு காட்சிகளுக்கான அனுமதியின்றி வெளியிட்டதாகக் கூறி மதுரை மாவட்டத்திலுள்ள 34  திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்களை 11, 12,13 மற்றும் 18 ஆகிய 4 நாட்களில் காலை 09.00 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கி அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து கடந்த 11ஆம் தேதியன்று நள்ளிரவு 1 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளதாகக் கூறி மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

image
அதில் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து இக்குறிப்பாணை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி தங்களது திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/okrhDHK

Post a Comment

0 Comments