Ad Code

Responsive Advertisement

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் ரிலீஸ் எப்போது? - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்தான் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம். இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். பத்து தல படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வரவேற்பைப் பெற்ற நிலையில், டிசம்பர் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், இடையில் நடிகர் சிம்பு தனது தந்தையின் உடல்நலக்குறைவு சிகிச்சை காரணமாக, அமெரிக்காவில் சில நாட்கள் இருந்ததால் படப்பிடிப்புகள் தடைப்பட்டது. மேலும் சில காரணங்களால் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நிறைவடைய தாமதமானது. இதனால், படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

image

கன்னியாகுமரி, பெல்லாரி, விசாகாப்பட்டினம் போன்ற இடங்களில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தநிலையில், கடந்த மாதம் சென்னை விஜிபி கோல்டன் பீச்சில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் வெளியிட முதலில் முடிவு செய்யப்பட்ட நிலையில், தனுஷின் ‘வாத்தி’ உள்பட பலப் படங்கள் அந்த மாதத்தில் வெளியிடப்பட உள்ளதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து, மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இந்தப் படம் வெளியிடப்பட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இதன்படி படம் மார்ச் 20, 2023-ல் திரைக்கு வர உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/7coP3wm

Post a Comment

0 Comments