விஜய்யின் 66வது படமாக உருவாகி வருகிறது 'வாரிசு'. தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்த படம் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது. 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விஜய்யின் 'வாரிசு' வெளியாக இருக்க நிலையில், படத்தில் முதல் பாடல் தற்போது ரிலீஸ் ஆகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதனையடுத்து வாரிசு படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுக்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வரும் வேளையில், தெலுங்கில் ரிலீசாக இருக்கும் வாரிசின் வரசுடு-க்கு இப்போதே தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மூலம் பிரச்னை எழுந்திருக்கிறது.
தெலுங்கு படங்களின் தயாரிப்புகள் அதிகரித்திருப்பதால் தெலுங்கு திரைப்படத் துறையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், சங்கராந்தி (பொங்கல் பண்டிகை) மற்றும் தசரா போன்ற பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முக்கியம் கொடுக்கப்படும் என கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியே அம்மாநில திரைத்துறை தீர்மானம் எடுத்திருப்பதால் தற்போது விஜய்யின் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வரசுடுக்கு முக்கியத்துவம் கொடுக்க தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மறுப்பு தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறது.
Telugu Film Producers Council Press Note 13-11-2022 pic.twitter.com/SGisdADoqC
— Telugu Film Producers Council (@tfpcin) November 13, 2022
அதன்படி, 2019ம் ஆண்டு ரஜினியின் பேட்ட படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியான போது அதற்கு மறுப்பு தெரிவித்த தயாரிப்பாளரும் ஃபிலிம் சாம்பரின் துணை தலைவருமான தில் ராஜு தற்போது தான் தயாரிக்கும் வாரிசு படத்தின் வரசுடுக்கு அதிக தியேட்டர்கள் கேட்பதாக தெலுங்கு தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியதோடு, பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக, வாரிசு படம் முதலில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிறது எனக் குறிப்பிட்டு வந்த நிலையில், நேரடி தமிழ் படம் தான் எனவும் அண்மையில் இயக்குநர் வம்சியே தெரிவித்துள்ளதால் அது தெலுங்கில் டப் செய்யப்பட்டுதான் வெளியிடப்பட இருப்பதால் தில் ராஜூவுக்கு எதிராக தெலுங்கு தயாரிப்பாளர் கவுன்சின் இந்த முடிவை எடுத்துள்ளதாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/CN9mUgL
0 Comments