தீபாவளி பண்டிகை படங்கள் வெளியான நிலையிலும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு மவுசு குறையாமல், வசூலில் சாதித்து வருகின்றது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், உலக அளவில் இதுவரை 460 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தமிழ் திரையுலகில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வசூல், தீபாவளி பண்டிகைக்கு வெளியான கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படங்களால் வசூல் பாதிக்குமோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால், அந்தப் படங்களை எல்லாம் ஓரங்கட்டி 22வது நாளான நேற்று, தமிழகத்தில் மட்டும் 2 கோடி ரூபாய் இந்தப் படம் வசூலித்துள்ளது.
மேலும், ஹாலிட் படமான ‘பிளாக் ஆடம்’ படத்தால் ஐமேக்ஸ் திரையரங்கில் மட்டும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தூக்கப்பட்டுள்ளது. மற்ற திரையரங்குகளில் இந்தப் படத்திற்கான முன்பதிவு வழக்கம்போல் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. கார்த்தியின் ‘சர்தார்’ படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இதனால் வழக்கம்போல் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது. இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை தினம் என்பதால், மேலும் வசூல் அதிகரிக்குமா இல்லை ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கான வசூல் பாதிக்குமா? என்று தெரியவரும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/fPFUXrA
0 Comments