Ad Code

Responsive Advertisement

நடிகை ஜாக்குலின் வெளிநாட்டிற்கு தப்ப முயற்சி: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்

பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் வெளிநாட்டிற்கு தப்பி ஓட முயன்றதாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

பெங்களூரை சோ்ந்த சுகேஷ் சந்திரசேகா் தொழிலதிபர்களிடம் இருந்து ரூ.200 கோடி மோசடி செய்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நடிகை நோரா பதேஹி ஆகியோருக்கு ஆடம்பர கார்கள் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை சாா்பில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா். மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர். நடிகை ஜாக்குலினுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நடிகை ஜாக்குலின் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

image

இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘நடிகை ஜாக்குலின் தனது செல்போனில் இருந்து தரவுகளை அழித்து விசாரணையின் போது சாட்சியங்களை சிதைத்து உள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் நேருக்கு நேர் உட்கார வைக்கப்பட்டு, ஆதாரங்களை முன்வைத்தபோது, நடிகை ஜாக்குலின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். நடிகை ஜாக்குலின் இந்தியாவை விட்டு வெளியேற விரும்பினார். ஆனால் அவரது பெயர் லுக் அவுட் நோட்டீசில் இருந்ததால். அவரால் செல்ல முடியவில்லை’ என்று கூறியிருந்தது. இதை மறுத்த நடிகை ஜாக்குலின் வழக்கறிஞர், அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நவம்பர் 10ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிக்க: உலக உணவு தினத்தில் 'பர்கர் கிங்' ஊழியர் செய்த வியக்கத்தகு செயல்... பின்னணி என்ன?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/tC2dVbi

Post a Comment

0 Comments