விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில் தீக்காய சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்தப்பின், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "36 மருத்துவக் கல்லூரிகளிலும் தீக்காய சிறப்பு சிகிச்சைப் பிரிவு இந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
தீக்காய விபத்துகள் இந்த ஆண்டு குறைவு. ஓரிருவருக்கு 17% பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஆந்திராவில் இருந்து ஒரு குழந்தை உட்பட 4 பேர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த ஆண்டு தீக்காயத்தால் உயிர் பாதிப்பு இருக்காது என்பது ஆறுதலான செய்தி.
ஸ்டான்லியில் 12 பேர் உள் நோயாளியகள். திருவண்ணாமலை, பண்ருட்டி உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்துள்ளனர். கை விரல் ஒருவருக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தீவிர காயம் இல்லை.
கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் 6 பேர் உள் நோயாளிகள். ஒருவருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண்பார்வை இழக்கும் அபாயம் இருக்கலாம். விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/6XpNBfY
0 Comments