Ad Code

Responsive Advertisement

'பான் இந்தியன் படமாக வந்திருக்க வேண்டியது இது'- சர்தார் பட நடிகர் சங்கி பாண்டே பேச்சு!

'சர்தார்' படத்துக்காக இரவும் பகலுமாக வேலை செய்துள்ளோம். உடல்ரீதியாகவே இது ஒரு கடினமான படம்'' என்று கூறியுள்ளார் இயக்குநர் பிஎஸ் மித்ரன்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசினார். அவர்களின் உரையை தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், ''இப்படத்தின் டிரைலர் வெளியாவதில் உற்சாகமாக உள்ளேன். இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த மேடையை ஒப்படைக்கிறேன்" என்று கூறி தொடங்கி வைத்தார்.

image

இயக்குநர் பி எஸ் மித்ரன் பேசும்போது, ''இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நிறைய மெனக்கெடல் இருந்தது. நிறைய உழைக்க வேண்டியிருந்தது. அதற்கு முதல் காரணம் லக்ஷ்மன் சார் தான். எல்லாத்தையும் தாண்டி ஒரு படத்தை எடுப்பதற்கு, நம்பிக்கை வைக்க வேண்டும். இவ்வளவு பணம் செலவு செய்து படம் எடுக்கிறோம் என்றால் அதற்கு தேவையான நம்பிக்கை வேண்டும். அதை லக்‌ஷ்மன் சார் தான் கொடுத்தார். இரவும் பகலுமாக வேலை செய்துள்ளோம். நடிகர்கள், துணை இயக்குனர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இரவும் பகலுமாக வேலை செய்துள்ளனர். உடல் ரீதியாகவே இது ஒரு கடினமான படம். கிட்ட தட்ட ஒரு பயிற்சி மாதிரி. கார்த்தி சார்... நான் உங்களை மிகவும் சிரமப் படுத்தியுள்ளேன். ஏனென்றால், ஏகப்பட்ட வித்யாசமான தோற்றங்கள் அவருக்கு இருந்தது. ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஏற்றவாறு தயாராக வேண்டும்.

இதுவரை நான் வேலை பார்த்த நடிகர்களை விட கார்த்தி சாருக்கு அவரின் நடிப்பின் மேல் ஈடுபாடு அதிகம். அவருடைய உடை, முடி, மேக்கப் அனைத்திலும் அவர் கவனத்துடன் இருப்பார். அது எனக்கொரு பயம் தந்தது. நாம் அதை விட்டுவிடக் கூடாது என்ற ஒரு எண்ணத்தை தந்தது. அவருடைய ஒத்துழைப்பும், சிரமமும் எனக்கு ஊக்கமளித்தது. இந்தப் படத்தில் நடித்ததற்கு கார்த்தி சாருக்கு நன்றி. ரஜிஷா தான் இந்தப் படத்திற்கு அரவணைப்பு கொடுத்தார்.

ஆக்ஷன் திரில்லர் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பு தந்ததற்கு ரஜிஷாவுக்கு பெரும் பங்குள்ளது. ராஷி கண்ணா, மிகவும் வலிமையான மற்றும் அறிவார்ந்த நடிகர். முதல் முதலில் நான் அவரை சந்தித்தப் போது, இவர் வட மாநிலத்தை சேர்ந்த பெண்; அதனால் ஆங்கிலத்தில் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், அவரை சந்தித்ததுமே `ஹாய் சார், எப்படி இருக்கீங்க' என்று தமிழில் பேச ஆரம்பித்தார். அதன் பிறகும் தமிழில் தான் பேசினார். அவர் சிறந்த நடிகர், மிகவும் வலிமையாக தனிமையிலுள்ள ஒரு கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்துள்ளார்.

image

லைலா மேடமுடன் முதலில் நான் தொலைபேசியில் பேசிய போது, என்னை மேடம் என்று அழைக்காதீர்கள்; லைலா என்று அழையுங்கள் என்றார். உங்களை என்னால் அப்படி அழைக்க முடியாது, நான் உங்களை மேடம் என்று தான் அழைப்பேன் என்றேன். ஆனால், அவர் படம் வெளியான பின்பு என்னை மேடம் என்று அழைக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். நானும் அவரை படம் வெளியான பின்பு மேடம் என்று அழைக்கப் போவதில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. அவரை நான் சிறுவயதில் “கண்ணாலே மியா மியா” பாடலை தான் கேட்டு ரசிப்பேன். முதல் முறை அவரை பார்த்தபோதும் அந்தப் பாடல் தான் நினைவுக்கு வந்தது. இப்படத்தில் லைலா மேடம் நடித்ததற்கு எனக்கு பெருமையாகவுள்ளது.

நாங்கள் இப்படத்தில் வில்லனை மிகவும் வலிமையான கதாபாத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்தோம். அப்போது தான் “பேகம் ஜான்” என்ற படத்தைப் பார்த்தேன். அதில் சங்கி பாண்டே சார் வில்லனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார். அதன் பின் அவரிடம் கேட்டபோது அவர் உடனே ஒப்புக் கொண்டார். அவருக்கு அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு அவருக்கு நன்றி.

என் நண்பர்கள், ரூபன், ஜார்ஜ், திலீப் இவர்கள் எல்லாம் என்னுடைய தூண்கள் என்றே சொல்லலாம். இவ்வளவு பெரிய படத்தை இயக்குகிறேன் என்றால், அதற்கு இவர்கள் என்னுடன் இருக்கும் தைரியத்தால் தான். இவர்கள் யாரும் என்னை ஒரு இயக்குனராக பார்க்க மாட்டார்கள். என்னை தலையில் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். அது எனக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். கலை இயக்குனர் கதிர் சார் தான் இந்த படத்தில் அதிகப்படியான சித்திரவதை அனுபவித்தவர் என்று நினைக்கிறேன். அவரை 7 அல்லது 8 நாட்கள் தளம் அமைக்கச் சொல்லிவிட்டு நாங்கள் இரண்டு நாட்களில் படப்பிடிப்பை நடத்திவிட்டு கிளம்பிவிடுவோம். பின்பு அவரை வேறு ஒரு தளம் அமைக்கச் சொல்லி கேட்போம். 80 காலகட்டத்தை மீண்டும் அமைக்கும் பணி அவருடையது. அதை அவர் சிறப்பாகவே செய்துள்ளார்.

image

ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் இந்த படத்தை தவிர வேறு எந்தப் படத்திற்கும் இவ்வளவு ஆடைகளை வடிவமைத்திருக்க மாட்டார். இந்த படத்தில் அவ்வளவு வித்தியாசமான ஆடைகள் தேவைப்பட்டது. நாங்கள் மிகவும் உறுதியான நம்பிக்கையோடு படப்பிடிப்பை ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் பட்டணம் ரஷீத் சார் தான். அவர் தான் ஹீரோவின் தோற்றத்திற்கு வடிவம் அமைத்து தந்தார். எனக்கும் கார்த்தி சாருக்கும் சிறிய தயக்கம் இருந்தது. காரணம், முதல் முறையாக கார்த்தி சார் இப்படி ஒரு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது தான். ஆனால், பட்டினம் ரஷீத் சார் அவரின் அனுபவத்தை படத்திற்காக கொடுத்தது ஒரு முக்கியமான விஷயம். ஜி.வி. பிரகாஷுடன் முதல் முறை வேலை பார்க்கிறேன். இசை, பின்னணி இசை அமைக்கும் வேலை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகிறது. பண்டிகை நாட்களில் வெளியாகும் என்னுடைய முதல் படம் இது. படம் நன்றாக இருக்கும் என நம்புகிறோம், நன்றி'' என்றார்.

கலை இயக்குனர் கதிர் பேசும்போது, ''இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். உலகத்தினுடைய ஒரு பிரச்சனையை கேள்வி கேட்கும். நன்றி'' என்றார்.

படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது, ''எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. இது என் நண்பர்கள் மித்ரன் - ஜார்ஜ் உடனான ஒரு பயணம் தான். 10 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த படம். இதை முதலில் லக்ஷ்மன் சாரிடம் கொண்டு சென்றோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பளித்ததற்கு நன்றி. அதன் பின்பு தான் கார்த்தி சார் இணைந்தார். இந்தப் படத்தை மித்ரனின் ஒரு பார்வையாக தான் நான் பார்க்கிறேன். கார்த்தி சார் எது செய்தாலும் இரண்டு முறை செய்யவேண்டும். டபுள் ஆக்ஷன் என்பதால். இதுவரை கார்த்தி சார் நடித்த படங்களை விட இப்படத்தில் நன்றாக நடித்துள்ளார். கதிர் சார் எங்களுக்கு சித்தப்பா மாதிரியான ஒருவர். அவர் ஒரு நல்ல வழிகாட்டி. இந்த படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இப்படம் ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும்'' என்றார்.

image

மாஸ்டர் ரித்விக் பேசும்போது, '' இது என்னுடைய இரண்டாவது படம். திரையரங்கில் வெளியாவதில் முதல் படம். அதிலும் தீபாவளிக்கு வெளியாவதில் ரொம்ப சந்தோஷம். கார்த்தி சாருடன் நடித்ததில் மிகப் பெரிய சந்தோஷம். இந்த படத்திற்காக என்னை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர் லக்ஷமன் குமார் சாருக்கு மிகப் பெரிய நன்றி. பி.எஸ்.மித்ரன் சாருக்கும் பெரிய நன்றி'' என்றார்.

 நடிகை ரஜிஷா பேசும்போது, ''மித்ரன் சாருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால், என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால், அந்த கதாபாத்திரத்தைப் பற்றி இப்போது கூற இயலாது. இதுபோன்ற வலிமையான கதாபாத்திரத்தை என்மீது நம்பிக்கை வைத்துக் கொடுத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பு கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் சாருக்கு நன்றி.  கார்த்தி சார் பொறுமை மற்றும் அன்பான நடிகராக இருந்தார். இதுபோன்ற கொடுக்கும் மனப்பான்மை கொண்ட நடிகருடன் நான் இதுவரை நடித்ததில்லை. என்னை அழகாக காட்டிய ஜார்ஜ் சாருக்கு நன்றி. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி'' என்றார்.

நடிகை ராஷி கண்ணா பேசும்போது, ''இப்படத்தின் டிரைலர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். மித்ரன் மிகவும் சிறந்த இயக்குநர். மித்ரன் போன்ற இயக்குநர்கள் கையில் தமிழ் சினிமா பாதுகாப்பாக உள்ளது. பல கதாபாத்திரங்கள் அமைத்து, பெண்ணியம் மற்றும் சமூக கருத்துகளையும் பொறுப்புணர்வோடு கதை அமைப்பது கடினம். அப்படியொரு ஒரு கடினமாக கதையை மிகவும் சுலபமாகவும், எளிமையாகவும் கையாண்டிருக்கிறார் மித்ரன். அவர் இயக்கும் அனைத்துப் படங்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல் அவரது இயக்கத்தில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.

சங்கி பாண்டே சார் அருமையாக நடித்திருக்கிறார். அவரை திரையில் பார்க்க ஆசைப்படுகிறேன். ஜார்ஜ் எனக்குப் பிடித்த ஒளிப்பதிவாளர். இந்த படத்தில் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். கார்த்தி மிகவும் பாதுகாப்பான நடிகர். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ரஜிஷா நன்றாக நடித்திருக்கிறார். அவர் இன்னும் நிறைய தமிழ் படங்கள் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் திலிப் சுப்புராயன் பேசும்போது, ''கார்த்தி சாருடன் நான் பணியாற்றிய அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அந்த வரிசையில் இப்படமும் ஹிட் தான்.  இப்படத்தின் ஆக்ஷனில் நிறைய வித்தியாசமான சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளோம். இந்த தீபாவளி சரவெடி தீபாவளியாக இருக்கும்'' என்றார்.

image

நடிகர் சங்கி பாண்டே பேசும்போது, ''கார்த்தி சார் சினிமாவிற்கான அவர் செய்யும் அர்ப்பணிப்பு நம்ப முடியாத ஒன்று. நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததால் ஹீரோயின்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படத்தை என் ஹிந்தி மொழியில் நீங்கள் வெளியிடவில்லை என்ற கேள்வி தான். இது ஒரு 'பான்' இந்தியன் படம் போன்று உள்ளது. நிச்சயம் அனைவரும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என்றார்.

நடிகை லைலா பேசும்போது, ''கார்த்தி சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. கார்த்தி சாரின் குடும்பத்திலுள்ள அனைவருடனும் நடித்துவிட்டேன். என்னை மீண்டும் திரைத்துறைக்கு அழைத்து வந்த பி எஸ் மித்ரனுக்கு நன்றி என்றார்.

இதையும் படிக்கலாமே: ஒரு சிறுவனுக்கும், ஃபிலிம் ரோல் சினிமாவுக்கும் இடையிலான பிரிக்கமுடியா பிணைப்பு! #PTReview

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/UktwZDB

Post a Comment

0 Comments