Ad Code

Responsive Advertisement

காதலியை கரம்பிடித்தார் 'குக் வித் கோமாளி' புகழ்!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஸ்டண்ட் அப் காமெடியன் புகழ், இன்று தன்னுடைய காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல ஷோக்களிலும் நடித்து இவர் பிரபலமடைந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிடைத்த வரவேற்பின் மூலமாக 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

image

இந்நிலையில், திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் இன்று காலை நடிகர் புகழ் மற்றும் பென்சியாவுக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் தற்போது கரம்கோத்துள்ளனர். இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதையும் படிக்க: அதிருப்தியில் ரசிகர்கள் வைத்த விமர்சனங்கள்... அதிரடி முடிவெடுத்த விக்ரமின் கோப்ரா படக்குழு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/ZgCclVP

Post a Comment

0 Comments