Ad Code

Responsive Advertisement

கள்ளக்குறிச்சி: துணிவு படம் வெற்றி பெற அஜித் புகைப்படத்தில் “மேஜிக் ஓவியம்”-ஓவியர் அசத்தல்

அஜித்தின் துணிவு படம் வெற்றி பெறுவதற்காக "ஒரு அஜித் படத்தில்" மூன்று அஜித் ஓவியம் இருக்குமாறு "மேஜிக் ஓவியம்" வரைந்து ஓவியர் அசத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையை சேர்ந்த ஓவியர் சு.செல்வம், நடிகர் அஜித்குமார் நடித்து வெளிவர இருக்கும் படமான "துணிவு" திரைப்படம் வெற்றி பெற வேண்டி, இரண்டு யூஸ் அண்ட் த்ரோவ் கிளாஸில் மேஜிக் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். ஒரு கிளாஸில் ஒரு அஜித் படம் வரைந்து, பிறகு மற்றொரு கிளாசில் மூன்று திரைப்படங்களிலிருந்து ரெட் திரைப்படம், வலிமை திரைப்படம், தற்போது வெளிவர இருக்கும் துணிவு திரைப்பட அஜித் ஆகிய மூன்று அஜித் ஓவியங்களை வரைந்து இருக்கிறார். இரண்டையும் சேர்த்து பார்த்தால் ஒரு மேஜிக் வியூ கிடைக்கிறது.

image

இந்த ஓவியத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஓவியர் செல்வத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/1mycdb5

Post a Comment

0 Comments