Ad Code

Responsive Advertisement

’ஒரு ஊருல ரெண்டு ராஜா இருந்தாங்களாம்’.. நானே வருவேன் முதல் பாடல் குறித்து வெளியான அப்டேட்!

’ஒரு ஊருல ரெண்டு ராஜா இருந்தாங்களாம்’ என்று தனுஷ் நானே வருவேன் சிங்கிள் பிக்சர் பதிவை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘மயக்கம் என்ன’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து தனுஷ், செல்வராகவன் இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். நடிகர் தனுஷ் - இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே 3 வெற்றிப் படங்களை தந்த நிலையில், 4-வது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

image

இதனால், ‘நானே வருவேன்’ படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு மற்றும் பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

image

சமீபத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் வருகிற 11-ம் தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் வருகிற 30-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சிங்கிள் புகைப்பட பதிவினை பகிர்ந்துள்ளார்.

image

தனுஷ் பகிர்ந்திருக்கும் அந்த பதிவில், ”ஒரே ஒரு ஊருக்குள்ளே, இரண்டு ராஜா இருந்தாராம். ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் வில் அம்பு இணைந்தவாறு இருக்கும் ஒரு சிம்பலையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது தனுஷின் அந்த பதிவை அவரது ரசிகர்கள் வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதேபோல் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “உங்கள் நெஞ்சத்தை வருடவரும் இசை! #NaaneVaruven திரைப்படத்தின் முதல் lyrical video 7/9/22 அன்று, மாலை 4:40'க்கு வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் நெஞ்சத்தை வருடவரும் இசை! #NaaneVaruven திரைப்படத்தின் முதல் lyrical video 7/9/22 அன்று, மாலை 4:40'க்கு வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன் @dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @saregamasouth pic.twitter.com/Fj6TxfiQJv
— Kalaippuli S Thanu (@theVcreations) September 5, 2022

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/6NfErOL

Post a Comment

0 Comments